நாட்டின் தூய்மையான நகரமாக தொடர்ந்து 7- ஆவது ஆண்டாக மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தூருடன் குஜராத்தின் சூரத் நகரமும் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. மகாராஷ்டிரத்தின் நவி மும்பை 3 - ஆவது இடத்திலும் ஆந்திரப் பிரசேத்தின் விசாகப்பட்டினம் 4- ஆவது இடத்திலும் உள்ளது.
ஒரு இலட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட தூய்மை நகரங்களில், மகாராஷ்டிரத்தின் சாஸ்வத், முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சத்தீஸ்கரின் பதான் , மகாராஷ்டிரத்தின் லோனாவாலா 3 - ஆம் இடத்தில் உள்ளன.
கங்கை ஆற்றங்கரையோர தூய்மை நகரங்களில் வாரணாசி முதலிடத்திலும் பிரயாக்ராஜ் 2 - ஆம் இடத்திலும் உள்ளன.
தூய்மையான கண்டோன்மென்ட் வாரியமாக மத்தியப்பிரதேசத்தின் மோவ் கண்டோன்மென்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தூய்மை சார்ந்து சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடத்திலும் மத்தியப்பிரதேசம் இரண்டாம் இடத்திலும் சத்தீஸ்கர் 3- ஆவது இடத்திலும் உள்ளன.